Posts

Showing posts from March, 2025

பெரியவா மகிமை

 பல வர்ஷங்களுக்கு முன்னால், உபன்யாஸ சக்ரவர்த்தி சேங்காலிபுரம் ஶ்ரீ அனந்தராம தீக்ஷதர், ஶ்ரீமடத்தில் இருந்தபோது, நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் ஸம்பவம். ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஶ்ரீமடத்தில் ஸுவாஸினி பூஜைக்கு ஏற்பாடாகியிருந்தது. ஸாக்ஷாத் பெரியவாளே அங்கே அமர்ந்திருக்க, பல ஊர்களிலிருந்து ஏகப்பட்ட ஸுமங்கலிகள் வந்திருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இவர்களிடையே ஒரு பெண்மணி மட்டும் சற்று வித்யாஸமாக இருந்தாள். ஸுமார் நாற்பது, நாற்பத்தஞ்சு வயஸிருக்கும். வைதவ்ய கோலமாக, நெற்றியில் குங்குமம் இல்லை. தலையில் பூ இல்லை. அவளைப் பார்த்தவர்களுக்கோ, ஒருவேளை குங்குமம் இட்டுக்கொள்ள மறந்துவிட்டாளோ! என்ற ஸந்தேஹம். ஒரு பெண் அவளிடம் குங்கும சிமிழை நீட்டியதும், ஏதோ பார்க்கக் கூடாததை பார்த்த மாதிரி, ஒதுங்கி ஓடினாள். பெரியவாளின் கருணாகடாக்ஷம் இவளை தப்பிக்க விடுமா? அவளை கூப்பிட்டார். தயங்கி தயங்கி அந்த தெய்வத்தின் முன் நின்ற போது, அந்தப் பெண்ணுக்கு அழுகைதான் பொத்துக்கொண்டு வந்தது. “அழாத!…. ஸுவாஸினி பூஜை நடக்கற எடத்ல குங்குமம் இல்லாம மூளி நெத்தியோட நிக்கறியே! இது பகவத் ஸன்னதி. எத்தன  ஸுவாஸினி வந்திருக்கா...

பெரியவா மகிமை

 பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக  இருந்ததில்லை. ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷிதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் அந்த வீட்டு அம்மா. ஒருநாள் ஒரு பரதேஸி, அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றபோது, அந்த அம்மா ஏதோ சில்லறை போட்டாள்.  அவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு, “குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒங்கண்ணுக்கு தெரியலியே?” என்று சொல்லிவிட்டு போய்விட்டான். அந்த அம்மா அதிர்ந்து போனாள் ! “நான் பண்ற குத்துவிளக்கு பூஜை, இவனுக்கு எப்டி தெரிஞ்சுது?…. காலுக்கு கீழ மூலிகையா?…” அந்தப் பரதேஸியோ, ஏதோ இவளிடம் மட்டும் பேச வந்தது போல், வேறு எந்த வீட்டிலும் யாஸிக்காமல் போய் விட்டான்.  ஒன்றும் புரிபடாமல் பெ...