Posts

Showing posts from February, 2025

தாடங்க ப்ரதிஷ்டை

Image
Jagadguru Shankaracharya of Moolamnaya Sarvajna Shri Kanchi Kamakoti Peetham Sri Shankara Vijayendra Saraswati Mahaswamigal , following the 2500 year old tradition as established by Adi Shankaracharya, did the Tatanka Pratishta Ceremony for Shri Akhilandeshwari Devi Temple on 16.02.2025 ஜய ஜய சங்கர  தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சில அபூர்வ நிகழ்வுகள் உண்டு.  குடந்தையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம்.  காஞ்சியில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்தி வரதர் தரிசனம்.  அதுபோன்ற ஒரு நிகழ்வுதான்  திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி தாடங்க ப்ரதிஷ்டை. ஆதிசங்கர பகவத்பாதர்கள் தாமே அமர்ந்த பீடமான மூலாம்னாய காமகோடி பீடத்தின் சங்கராசார்ய மகாசன்னிதானங்களின் திருக்கரங்களால் அன்னை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கம் அணிவிக்கும் விழா. கடந்த 340 ஆண்டுகளில் 6 முறை நிகழ்ந்து, ஏழாவது முறையாக வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கிறது.  •⁠  ⁠பொ.யு. 1686 அக்ஷய ௵  ஶாங்கர ஸம்வத்ஸரம் 2195,  ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் 59-ஆவது ஜகத்குரு ஆசார்யர்களான, ஸ்ரீபகவந்நாம...