தாடங்க ப்ரதிஷ்டை
Jagadguru Shankaracharya of Moolamnaya Sarvajna Shri Kanchi Kamakoti Peetham Sri Shankara Vijayendra Saraswati Mahaswamigal , following the 2500 year old tradition as established by Adi Shankaracharya, did the Tatanka Pratishta Ceremony for Shri Akhilandeshwari Devi Temple on 16.02.2025
ஜய ஜய சங்கர
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சில அபூர்வ நிகழ்வுகள் உண்டு.
குடந்தையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம்.
காஞ்சியில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்தி வரதர் தரிசனம்.
அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி தாடங்க ப்ரதிஷ்டை.
ஆதிசங்கர பகவத்பாதர்கள் தாமே அமர்ந்த பீடமான மூலாம்னாய காமகோடி பீடத்தின் சங்கராசார்ய மகாசன்னிதானங்களின் திருக்கரங்களால் அன்னை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கம் அணிவிக்கும் விழா.
கடந்த 340 ஆண்டுகளில் 6 முறை நிகழ்ந்து, ஏழாவது முறையாக வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கிறது.
• பொ.யு. 1686 அக்ஷய ௵
ஶாங்கர ஸம்வத்ஸரம் 2195,
ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடம்
59-ஆவது ஜகத்குரு
ஆசார்யர்களான, ஸ்ரீபகவந்நாம போதேந்த்ரஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களாலும்,
• பொ.யு.1757 ஈஶ்வர ௵
ஶாங்கர ஸம்வத்ஸரம் 2266,
ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடம்
62-ஆவது ஜகத்குரு
ஆசார்யர்களான, ஸ்ரீசந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களாலும்.
• பொ.யு. 1846 பராபவ ௵
ஶாங்கர ஸம்வத்ஸரம் 2355,
ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடம்
64-ஆவது ஜகத்குரு ஆசார்யர்களான, ஸ்ரீசந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களாலும், அப்போது பூர்வாஶ்ரமத்தில் இருந்த ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் 65-ஆவது ஆசார்யர்களான, ஸ்ரீஸுதர்ஸன மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் கைங்கர்யத்திலும்.
• பொ.யு. 1908 பிலவங்க ௵
ஶாங்கர ஸம்வத்ஸரம் 2416,
ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் 68-ஆவது ஜகத்குரு ஆசார்யர்களான ஸ்ரீசந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களாலும்.
• பொ.யு. 1923 ருதிரோத்காரி ௵ ஶாங்கர ஸம்வத்ஸரம் 2432,
ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடம்
68-ஆவது ஜகத்குரு ஆசார்யர்களான, ஸ்ரீசந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களாலும்.
*பொ.யு. 1992 ப்ரஜாபதி ௵
ஶாங்கர ஸம்வத்ஸரம் 2500,
ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் 69-ஆவது ஜகத்குரு ஆசார்யர்களான, ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள், ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் 70வது ஜகத்குரு ஆசார்யர்களான, ஸ்ரீஶங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களாலும் சிறப்புடன் ஸ்ரீஅகிலாண்டேஶ்வரீ அம்பாளுக்கு தாடங்க ப்ரதிஷ்டைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஶங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களாகிய பூஜ்யஸ்ரீ மஹாஸந்நிதானங்கள் அவர்கள் நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ க்ரோதி ௵ மாசி ௴ 04 ௳ (16 பிப்ரவரி 2025, ஶாங்கர ஸம்வத்ஸரம் 2533) ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீஅகிலாண்டேஶ்வரீ அம்பாளுக்குத் தமது திருக்கரங்களால் தாடங்க ப்ரதிஷ்டை
Comments
Post a Comment