Posts

Showing posts from July, 2025

பெரியவா மகிமை

 கருணை தெய்வமாம் ஈஸ்வரரே ஒரு சாதாரண சந்யாச திருக்கோலம் கொண்டு, உயரியமேன்மை நிலையாம் சுகபிரம்மரிஷி அவர்களின் லக்ஷணங்களோடும் திகழ்ந்து நம்மிடையே அந்த அபூர்வ உயர்நிலையை மறைத்த எளிமையோடு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளாய் அருள்பொழிந்துள்ளார். ஸ்ரீ சுந்தரராமன் அவர்களுக்கு ஸ்ரீ மஹாபெரியவாளிடம் ஏற்பட்ட அபூர்வமான அனுபவங்கள் ஏராளம் ஸ்ரீ பெரியவா வலியவந்து அருளி அவருக்கு படித்து பட்டம் பெற எல்லா ஏற்பாடுகளையும் தந்தையின் மேலான அக்கறையுடனும் கருணையோடும் அனுக்ரஹத்துள்ளார். 1960-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் அவர் பி.எஸ்.ஸி. ஹானர்ஸ் பரிட்சைகளை எழுதிவிட்டு திருச்சியில் ஸ்ரீ பெரியவாளுக்கு இரண்டு மாதங்களாக கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். திருச்சிராபள்ளி நேஷனல் உயர்நிலை பள்ளியில் ஸ்ரீ பெரியவா அருளிக்கொண்டிருந்தார் ஒரு நாள் காலை பள்ளியின் எதிரே இருந்த பார்பர்ஷாப்பிற்கு சுந்தரராமன் சென்றார். முடிதிருத்திக் கொள்ள உட்கார்ந்தார். எப்போதுமே இப்படிப்பட்ட சமயங்களில் எல்லா நாவிதர்களும் தன் வேலையோடு ஏதாவது அரட்டை அடித்துக் கொண்டே தொழில் செய்வார்கள். அவர்களுக்கு அரசியலைப்பற்றியோ, அரசியல்வாதிகளைப்பற்றியோ, சினிமா நடிகர்கள...

பெரியவா மகிமை

 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா காருண்ய தெய்வமல்லவா? இதனால்தானோ என்னவோ அடைக்கலம் தேடி ஸ்ரீமகானிடம் வருபவர்கள் ஏராளம். தன் துன்பங்களை உணரக் கூடிய பக்தர்களையின்றி அதில் தான் யார் என்பதை அறிந்து கொள்ளும் புத்திசுவாதீனமற்றவர்களும் அடங்கும். புத்தி பேதலித்து பித்தர்களாக இப்படி அவ்வப்போது ஸ்ரீமடத்திற்கு வருவதும் இரண்டு மூன்று நாட்கள் தங்குவதும் நடப்பதுண்டு. ஆனால் இந்தப் பித்தனோ வந்து பத்து பதினைந்து நாட்கள் கடந்துவிட்டன. யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. என்றாலும் தன் தலையில் மண்ணைவாரி இறைத்துக் கொள்வதும் எதையாவது சொல்லிக் கொடுத்தால் அதை அப்படியே சொல்வதுமாக அந்த பித்தன் அங்கிருந்தவர்களுக்கு கொஞ்சம் இடைஞ்சலாக சேஷ்டைகள் செய்துக் கொண்டிருந்தான்.இந்த பித்தனை விரட்டி விடலாமென்று ஸ்ரீபெரியவாளிடம் முறையிட்டனர். சாப்பிட்டாலும் அளவுக்கு மீறி அதிகமாக சாப்பிடும் இவன் அங்கே பிரச்சனையாகத்தான் தெரிந்தான்.ஆனால் ஸ்ரீபெரியவாளோ, இருந்துட்டு போகட்டுமே அவன் யாரையும் தொந்திரவு பண்றதில்லயே, என்று தன் கருணையை வெளிப்படுத...