பெரியவா மகிமை
கருணை தெய்வமாம் ஈஸ்வரரே ஒரு சாதாரண சந்யாச திருக்கோலம் கொண்டு, உயரியமேன்மை நிலையாம் சுகபிரம்மரிஷி அவர்களின் லக்ஷணங்களோடும் திகழ்ந்து நம்மிடையே அந்த அபூர்வ உயர்நிலையை மறைத்த எளிமையோடு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளாய் அருள்பொழிந்துள்ளார். ஸ்ரீ சுந்தரராமன் அவர்களுக்கு ஸ்ரீ மஹாபெரியவாளிடம் ஏற்பட்ட அபூர்வமான அனுபவங்கள் ஏராளம் ஸ்ரீ பெரியவா வலியவந்து அருளி அவருக்கு படித்து பட்டம் பெற எல்லா ஏற்பாடுகளையும் தந்தையின் மேலான அக்கறையுடனும் கருணையோடும் அனுக்ரஹத்துள்ளார். 1960-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் அவர் பி.எஸ்.ஸி. ஹானர்ஸ் பரிட்சைகளை எழுதிவிட்டு திருச்சியில் ஸ்ரீ பெரியவாளுக்கு இரண்டு மாதங்களாக கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். திருச்சிராபள்ளி நேஷனல் உயர்நிலை பள்ளியில் ஸ்ரீ பெரியவா அருளிக்கொண்டிருந்தார் ஒரு நாள் காலை பள்ளியின் எதிரே இருந்த பார்பர்ஷாப்பிற்கு சுந்தரராமன் சென்றார். முடிதிருத்திக் கொள்ள உட்கார்ந்தார். எப்போதுமே இப்படிப்பட்ட சமயங்களில் எல்லா நாவிதர்களும் தன் வேலையோடு ஏதாவது அரட்டை அடித்துக் கொண்டே தொழில் செய்வார்கள். அவர்களுக்கு அரசியலைப்பற்றியோ, அரசியல்வாதிகளைப்பற்றியோ, சினிமா நடிகர்கள...