பெரியவா மகிமை
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா காருண்ய தெய்வமல்லவா? இதனால்தானோ என்னவோ அடைக்கலம் தேடி ஸ்ரீமகானிடம் வருபவர்கள் ஏராளம். தன் துன்பங்களை உணரக் கூடிய பக்தர்களையின்றி அதில் தான் யார் என்பதை அறிந்து கொள்ளும் புத்திசுவாதீனமற்றவர்களும் அடங்கும். புத்தி பேதலித்து பித்தர்களாக இப்படி அவ்வப்போது ஸ்ரீமடத்திற்கு வருவதும் இரண்டு மூன்று நாட்கள் தங்குவதும் நடப்பதுண்டு. ஆனால் இந்தப் பித்தனோ வந்து பத்து பதினைந்து நாட்கள் கடந்துவிட்டன. யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. என்றாலும் தன் தலையில் மண்ணைவாரி இறைத்துக் கொள்வதும் எதையாவது சொல்லிக் கொடுத்தால் அதை அப்படியே சொல்வதுமாக அந்த பித்தன் அங்கிருந்தவர்களுக்கு கொஞ்சம் இடைஞ்சலாக சேஷ்டைகள் செய்துக் கொண்டிருந்தான்.இந்த பித்தனை விரட்டி விடலாமென்று ஸ்ரீபெரியவாளிடம் முறையிட்டனர். சாப்பிட்டாலும் அளவுக்கு மீறி அதிகமாக சாப்பிடும் இவன் அங்கே பிரச்சனையாகத்தான் தெரிந்தான்.ஆனால் ஸ்ரீபெரியவாளோ, இருந்துட்டு போகட்டுமே அவன் யாரையும் தொந்திரவு பண்றதில்லயே, என்று தன் கருணையை வெளிப்படுத...
Comments
Post a Comment